search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா போட்டி"

    • இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி பொக்ராவில் நடைபெற்றது.
    • போட்டியில் கலந்து கொண்ட பாலந்த ரத்திஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    தென்காசி:

    நேபாள நாட்டில் உள்ள பொக்ராவில் இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட தபிசா மற்றும் ஐ.சி.எஸ்.எஸ்.பி.இ.- மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் பாலந்த ரத்திஷ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    இம்மாணவர் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் தெற்காசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    • யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது.
    • மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார்.

    தென்காசி:

    மதுரை சகோதயா ஒவ்வொரு வருடமும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வருகிறது. அதன்படி யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவி கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தென்காசி ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் முகமது இலியாஸ் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்று சாதனை படை த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். மண்டல அளவில் முதலி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முகிலன்,முகமது அப்துல்லா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023 தேர்ச்சி போட்டியில் கலந்து கொண்டனர்.

    பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் முகிலன், 6-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன், முகமது இலியாஸ் மற்றும் 5-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத் ஆகியோர் 2-ம் இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெறக்கூடிய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாணவர்களுக்கு யோகா ஆசிரியை மாதவி பயிற்சி அளித்தார். வெற்றி பெற்று தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    • நூலக வார விழாவில் யோகா போட்டி இரு பிரிகளாக நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

    தென்காசி:

    தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நூலக வார விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் யோகா போட்டி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிகளாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் தென்காசி வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

    ஏற்பாடுகளை த.மு.எ.க.ச. மாவட்ட செய லாளர் பக்ருதீன் அலி அகமது, போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம்,யோகா பயிற்சியாளர் அரவிந்த் யோகாலயா, மருது சுபாஷ், வட்டார நூலகர் பிரம்ம நாயகம், கிளைநூலகர் சுந்தர், நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதிஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகாபோட்டி நடைபெற்றது.
    • மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகாபோட்டி நடைபெற்றது.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிக்கு மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க செயலாளர் நித்தியா ராஜேஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

    யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், துணை தலைவர் ரமேஷ் பட்டேல் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். யோகாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    • யோகா போட்டியில் தமிழகம் முழுவதும் 700-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 8-வது மாநில அளவிலான யோகா போட்டி சேலம் விநாயக மிஷன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    தமிழகத்தில் 8-வது மாநில அளவிலான யோகா போட்டி சேலம் விநாயக மிஷன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் திருப்பூர் பிரண்ட்லைன் மிலோனியம் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி எஸ்.சம்யுக்தா ஸ்ரீ கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியையும், அதற்கு உறுதுணையாக இருந்த யோகா ஆசிரியர் நந்தகுமாரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி சக்தி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினர்.

    • நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
    • இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    வத்திராயிருப்பு

    நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகளான விஷாலி (18), சக்தி பிரியா (17) ஆகியோர் பங்கேற்றனர். இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    இருவரும் நேற்று காலை சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பினர். பதக்கம் வென்ற சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர். பதக்கம் வென்ற சகோதரிகள் கூறுகையில், நாங்கள் யாரிடமும் யோகா பயிற்சி பெறவில்லை. யூடியூப் மூலமாக பயிற்சி செய்ய கற்றுக்கொண்டோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என்றனர். 

    மாணவி சுபானு தனது தாய் சீதாவுடன் சேர்ந்து புதுச்சேரியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் -சீதா தம்பதியின் மகள் சுபானு.

    இவர் உலக அளவில் பல்வேறு யோகா போட்டி யில் பங்கேற்று 10-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை வென்று ள்ளார்.

    இந்நிலையில் மாணவி சுபானு தனது தாய் சீதாவுடன் சேர்ந்து புதுச்சேரியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா மாணவியின் சாதனைகளை கேட்டறிந்து பாராட்டி கவுரவித்தார்.

    ×